செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (08:26 IST)

நடிகை பூர்ணா திருமண மோசடி: மேலும் 2 பேர் சிறையில் அடைப்பு!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்து ரசிர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பூர்ணிமா. இவர் அசின் போன்று உள்ளதாக அனைவராலும் பேசப்பட்டார். இவர் தற்ப்போது கேரள மாநிலம் கொச்சி மரட் பகுதியில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் பூர்ணாவிற்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த அவரது குடும்பத்தாரிடம்  மாப்பிள்ளை பார்ப்பதாக வருவதாக கூறிய ஒரு கும்பல் மாப்பிள்ளை துபாயில் நகைக்கடை வைத்துள்ளதாக கூறி பிசினஸுக்கு அவசரமாக பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கேட்டுள்ளார்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த நடிகை பூர்ணாவின் தந்தை மரட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் நான்கு பேரை கைது செய்தனர். தற்ப்போது இந்த சம்பவம் தொடர்பாக கோவையை சேர்ந்த நஜீப் ராஜா(வயது27), ஜாபர் சாதிக்(27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.