செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (08:01 IST)

அடடே இது வித்யாசமா இருக்கே... ட்ரெட்மில் டான்ஸை தொடர்ந்து பெட் டான்ஸ்!

துருவங்கள் 16 என்ற படத்தில் நடித்த அஸ்வின் குமார் டிரெட் மில்லில் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடும் ஒரு வீடியோ கடந்த சில வாரங்களுக்கு முன் வைரல் ஆனது. பலரும் அவரின் வீடியோவை பார்க்க வைரலான வீடியோ கமலே அந்த வீடியோவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

அதையடுத்து  விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவ, விஜய் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இப்படி வெகு சில நாட்களிலே ஹீரோக்களுக்கு நிகராக வித்தியாசமாக நடனமாடி பேமஸ் ஆன  அஸ்வின் குமார் தற்ப்போது தனது மகனுடன் பெட் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். படுக்கையில் படுத்தபடியே வித்யாசமான ஸ்டெப் போட்டு... எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுத்து அசத்திய இந்த பெட் டான்ஸ் தற்ப்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .