1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:05 IST)

ஆடையில்லாமல் நடிக்க தயார்: வளர்ந்து வரும் நடிகை சர்ச்சை பேச்சு!!

கிடாரி, குற்றம் 23 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் வளர்ந்து வரும் நடிகை சுஜா வரூணி.


 
 
தற்போது அவர் அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள், கதிர் நடிக்கும் சத்ரு, சமுத்திரகனி நடிக்கும் ஆண்தேவதை படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் அவர், அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. மேலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என கருதுகிறேன்.
 
மேலும், ஆடையில்லாமல் நடிப்பதற்கான துணிச்சலும் இருக்கிறது. கவர்ச்சிக்காகவே செயற்கையாக திணிக்கப்படும் காட்சிகளில் ஆபாசமான ஆடையணிந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லும் துணிவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.