நடிகை சோனம் கபூர் பிரபல பாலிவுட் இயக்குனர் மீது பாலியல் புகார்
பிரபல நடிகர் அணில் கபூரின் மகள் சோனம் கபூர் , த்ரி இடியட்ஸ் படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
சோனம் கபூர் நடித்துள்ள ஏக் லடிகி கோ தேஹா லஹா (Ek Ladki Ko Dekha Toh Aisa Laga ) படத்தை ப்ரோமோட் செய்யும் பணியில் அணில் கபூரும் அவரது மகள் சோனம் கபூரும் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனம் கபூர் , மீடு விவாரம் குறித்து பேசினார். அப்போது பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 2018 ம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சோனம் கபூர் கூறினார். சஞ்சு படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்த போது ராஜ்குமார் ஹிராணி பாலியல் தொந்தரவு அளித்ததாக சோனம் கபூர் அப்போது தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த சோனம் கபூர், மீடு விவகாரத்தில் பெண்களை எப்போதும் நம்புவேன். இந்த விவகாரத்தில் இரண்டு விஷயம் முக்கியமானது. ஒன்று படம் , இன்னொன்று மீடு விவாகாரம். நான் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். அவரை பற்றி படம் வெளியாகின்ற போது விளக்கமாக பேசுகிறேன் என்றார்.