1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (07:25 IST)

கவர்ச்சியாக நடிக்காததால் சோனாவுக்கு நிகழ்ந்த சோகம்!

தமிழ் பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சோனா. இவர் கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் 2 வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவதார வேட்டை படத்தில் நடித்துள்ளார்.


 
இதுகுறித்து சோனா கூறுகையில், “கவர்ச்சியாக நடித்து எனக்கு சலிச்சு போச்சு.  ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து பார்த்து போரடிச்சு இருக்கும். இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல்  குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாமீ என முடிவு செய்தேன். ஆனால் நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பின்பு புதிய படங்களில் நடிக்க யாருமே என்னை அழைக்கவில்லை.
 
இப்போது மலையாள படங்களில் நடித்து வருகிறேன். அங்கு குணச்சித்திர வேடங்களில் நடித்து பல படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.