1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (08:42 IST)

சிம்ரனின் 50 ஆவது படமாக சப்தம் அறிவிப்பு! போஸ்டரோடு வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியிலும் 2000 தின் தொடக்கத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். 2000களுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு அவர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இப்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குனர் அறிவழகன் ஆதி நடிக்கும் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் ஒரு பேய் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் சிம்ரனின் 50 ஆவது படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான போஸ்டரை படக்குழு வெளியிட்டு சிம்ரனுக்கு மரியாதை செய்துள்ளனர்.