1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 14 மார்ச் 2023 (17:45 IST)

பள்ளி மாணவர் மாரடைப்பால் மரணம்....இறப்பிற்கு முன் அவரது வாள்வீச்சு சாகச வீடியோ வைரல்

student dead
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஷ்வரர் கோயிலில் பஞ்சமி தினவிழா நிகழ்ச்சியின்போது, 17 வயது பள்ளி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில், பஞ்சமி தினவிழா முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கோயிலில் குழுமியிருந்தனர்.

அப்போது, பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் பக்தர்களுக்கு வாள்வீச்சு சாகசம் செய்துகாட்டியுள்ளார்.

பின்னர்  நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவர் மயக்கமடைந்துள்ளார்.  குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., அவர் இறப்பதற்கு முன் கோயிலில் வாள்சாகசம் செய்யும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.