1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: திங்கள், 13 மார்ச் 2023 (13:13 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் கொரோனாவுக்கு உயிர்ப்பலி: திருச்சி இளைஞர் மரணம்..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒற்றை இலக்க எண்களில் தான் உள்ளன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூரில் பணி புரிந்து கொண்டிருந்த நிலையில் அவர் நண்பர்களுடன் கோவா சுற்றுலா சென்றார். 
 
கடந்த 9ஆம் தேதி அவர் திருச்சிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது
 
இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் உயிர் இழந்தார். கொரோனா பாதிப்பால் தான் அவர் உயிரிழந்தார் என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். 
 
இந்த நிலையில் உயிரிழந்த இளைஞருடன் கோவா சென்ற அவருடைய நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
 
Edited by Siva