1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (19:06 IST)

பாதுகாவலர்களுடன் அமர்நாத் யாத்திரை செல்லும் நடிகை சாரா அலிகான்

sara ali khan
ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் அமர் நாத் யாத்திரையில் நடிகை சாரா அலிகான் பங்கேற்றுள்ளார்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் சயீப் அலிகான்.. இவரது மனைவி ஷர்மிளா தாக்கூர். இந்த தம்தியரின் மகள் சாரா அலி கான். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அபிஷேக்  கபூரின் கேதார் நாத் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தில் ஹீரோவாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்ததிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து சாரா அலிகான் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது தந்தை முஸ்லீம், மற்றும் தாயார் இந்து இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

தற்போது, ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் சாரா அலிகான் கலந்து கொண்டு வருகிறார். இவர், காவி நிறத் துண்டு ஒன்றை அணிந்து நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்து பக்தர்களாக அல்லாதவர்கள் நுழைவதற்கு தடை என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ள  நிலையில்,  இவரது வருகைக்கு அங்குள்ள கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.  இருப்பினும் நடிகை சாரா அலிகான் தன் கையில் தடி மற்றும், பாதுகாவலர்களுடன் பாதயாத்திரையில் நடந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.