செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (17:19 IST)

பிரபல நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகருக்கு சிறைத் தண்டனை

JEEVITHA, RAJASEKAR
பிரபல நட்சத்திர தம்பதியர் ராஜசேகர் மற்றும் ஜீவிதாவுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் 80 –களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜீவிதா. இவர் முன்னனி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த நிலையில்  நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்,  தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கி பற்றி பல ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர்.

அதில், நன்கொடையாக பெறப்படும் ரத்தத்தை சிரஞ்சீவி வெளி மார்க்கெட்டில் விற்பதாக புகார் கூறினர்.

இதுகுறித்து,  சிரஞ்சீவியின் உறவினரும், தெலுங்கு சினிமா தயாரிப்பளருமான அல்லு அரவிந்த் கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதில், சேவை மனப்பான்மையில் ஈடுபட்டு வரு ரத்த வங்கி பற்றி இருவரும் ஆதாரமின்றி அவதூறு பரப்புவதாக கூறியிருந்தார்.

இவ்வழக்கு  ஐதராபாத்தில் உள்ள 17 வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சாய் சுதா விசாரித்த நிலையில்,  ராஜசேகர் ஜீவிதா தம்பதியர்க்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

இத்தண்டனையை எதிர்த்து அப்பீலுக்குச் செல்லவும் இருவருக்கும்  ஜாமீனும் வழங்கியுள்ளார்.