வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2018 (20:48 IST)

பிரபல மலையாள நடிகைக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை...

பிரபல மலையாள நடிகை சனுஷா தமிழில் ரேனிகுண்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நந்தி, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில், படப்பிடிற்கு சென்றுவிட்டு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தார். ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த சனுஷாவை அன்டோ போஸ் என்பவர், சனுஷாவின் உதட்டில் கை வைத்திருக்கிறார். 
 
இந்த சம்பவத்தின் போது, திரைக்கதை ஆசிரியர் உன்னி மற்றும் ரஞ்சித் என்பவர் மட்டும் சனுஷாவிற்கு உதவி செய்திருக்கிறார்கள். இது குறித்து சனுஷா பின்வருமாரு கூறியுள்ளார், ரயிலில் ஏற்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. 
 
அந்த சம்பவத்தின் போது, என்னுடன் பயணித்தவர்கள் மட்டுமே எனக்கு உதவி செய்தார்கள். மற்ற பயணிகள் யாரும் உதவிக்கு வரவில்லை. ஒரு சாதாரண பெண்ணுக்கு இதுபோல் நடந்திருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாள் என தெரிவித்துள்ளார்.