திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (16:16 IST)

இன்ஸ்டாகிராமில் முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா

நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு தனது பெயரான சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை சமந்தா அக்னினேனி என மாற்றிக்கொண்டார். இது நாக சைதன்யாவின் குடும்ப பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் முதலிரவில் இருப்பது  போன்ற படம் போட்டு, “மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் ” என குறிப்பிட்டுள்ளார்.

 
கட்டிலின் அருகே நிற்பதுப்போல் நைட்டி அணிந்து பின்பக்கமாக திரும்பி போஸ் தந்திருக்கிறார் சமந்தா. நைட்டியின் முதுகுபகுதியில் மிஸர்ஸ் அக்கினேனி என எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது.
 
இந்த புகைப்படத்தில் பலரும் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த முதல் இரவு அறையில் இருந்து புகைபடத்தை வெளியிட்டு  நடிகை சமந்தா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.