வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 31 மே 2023 (17:40 IST)

சாய் பல்லவியின் நீளமான முடிக்கு காரணம் இதுதானாம் - அவரே சொன்ன ரகசிய டிப்ஸ்!

தமிழ்நாட்டு பெண்ணான சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். அதில் மலர் டீச்சர் கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்களை வாரி குவித்தது. தமிழ், தெலுங்கு என பிரேமம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தெலுங்கில் ரீமேக் செய்தனர். 
 
இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது சாய் பல்லவி தனது நீண்ட முடியின் ரகசியத்தை ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். அவர் இயற்கையான உணவுகளான, பழங்கள் காய்கள், பழசாறு உள்ளிட்டவற்றையே சாப்பிடுவாராம். 
 
மேலும் முடிக்கும் கற்றாழை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  கூந்தலின் உற்ற நண்பன் கற்றாழை தான். தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் பொடுகைத் தடுக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.