திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:43 IST)

கொரோனா வார்டில் இருந்து காதலியை சந்திக்க சென்ற வாலிபர் கைது: பெரும் பரபரப்பு

கொரோனா வார்டில் இருந்து காதலியை சந்திக்க சென்ற வாலிபர் கைது
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்து தப்பித்து காதலியை பார்க்க சென்றதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ஆஸ்திரேலியா நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்ததை அடுத்து அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் அவ்வப்போது தனிமைப்படுத்துதல் அறையில் இருந்து ஜன்னல் வழியாக தப்பித்து வெளியே சென்றதாக தெரிகிறது
 
சம்பவத்தன்று அதே போல் அவர் ஜன்னல் வழியாக தப்பித்து தனது காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், காவல்துறையினர் அந்த இளைஞரின் காதலியின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்
 
தனது காதலிக்கு பிறந்தநாள் என்றும், அதனால் பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காகவே வந்தேன் என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் நீதிபதிகள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இளைஞருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது