போதைப்பொருள் விவகாரம்: விசாரணைக்கு வரமுடியாது என ஜெயம்ரவி நடிகை அறிவிப்பு
விசாரணைக்கு வரமுடியாது என ஜெயம்ரவி நடிகை அறிவிப்பு
கன்னட திரையுலகினர் பலரும் போதை பொருள் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
தொலைக்காட்சி நடிகை ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் செய்த விசாரணையில் அவர் மூலம்தான் கன்னட திரையுலகினர் பலருக்கு போதை பொருளை சப்ளை செய்யப்பட்டு இருப்பதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
திரைப்பட நட்சத்திரங்கள் மட்டுமன்றி கல்லூரி மாணவர்கள் பலரும் போதைக்கு அடிமையாகி உள்ளதால் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதியும் சிக்கி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் விசாரணைக்கு வரவேண்டும் என்றும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்
ஆனால் இந்த தன்னால் ஆஜராக முடியாது என்றும் அது குறித்து விளக்கமளித்த ராகினி திவேதி விசாரணைக்கு தனது வழக்கறிஞரை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது