1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2019 (20:04 IST)

நடிகை ராகவியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

பிரபல நடிகை ராகவியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளித்திரையிலும்  , சின்னத்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கும் நடிகை தற்போது ராகவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் சசிகுமார் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தொழில் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட கடன் சுமையால் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறி வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  மனைவி ராகவி அவரை அடையாளம் காட்டினார். பின்னர் போலீஸ் விசாரணையில், சசிகுமார்  பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, கடன் சுமையால் அடகு வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருடன் பணிபுரிந்த மகேஷ் என்பவருடன் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகவும், அதனால், சசிகுமாரை, ‘கேமரா திருடன்’ என வாட்ஸப்பில் தகவல் பரப்பி மகேஷ் அசிங்கப்படுத்தியுள்ளார். அதனால் மனமுடைந்து இப்படி செய்துகொண்டதாக மனைவி ராகவி கண்ணீருடன் கூறினார்.