1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (12:34 IST)

நானி 31 ஆவது படத்தில் கதாநாயகியான பிரியங்கா மோகன்!

டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது விஜய் அடுத்து நடித்துவரும் தளபதி 68படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகி என சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது நானி 31 ஆவது படத்தில் பிரியங்கா மோகன்தான் கதாநாயகி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.