செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (16:57 IST)

சமந்தாவின் கணவருக்கு ஜோடியாகும் தமிழ் செய்தி வாசிப்பாளர்!

தமிழில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்து பின்னர் கதாநாயகியாக உருவானவர் பிரியா பவானி சங்கர்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கில் நடிகை சமந்தாவின் கணவர் நடிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.