1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:09 IST)

லதா மங்கேஷ்கர் வீட்டு முன்னர் கொரோனா தடுப்பு – பின்னணி என்ன?

இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான லதா மங்கேஷ்கர் வீட்டு முன் கொரோனா தடுப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் அவர் வீட்டு முன்பு மும்பை சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு வளையம் வைத்துள்ளனர். இது சினிமா ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்த அதற்கு விளக்கம் அளித்துள்ளார் லதா மங்கேஷ்கர்.

அதில் ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைக் காரணமாகவே அதிகார்கள் சீல் வைத்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.