ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (13:29 IST)

நடிகை பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி! மீண்டுவர அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்!

செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.
 
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து ஹிட் கொடுத்ததை அடுத்து எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் அடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
 
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் பிரியா பவானி சங்கருக்கு பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு இயங்கிவருகிறது.  இதனை கண்டு கடுப்பாகியுள்ள பிரியா பவானி அந்த போலி கணக்கை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது "என்னை விட நீங்கள் பொறுப்பாக இருக்கிறீர்கள். ஆனால், மணிக்கு ஒருமுறை பதிவிட்டு என்னை எரிச்சலாக்காதீர்கள் ‘என்று பதிவிட்டுள்ளார். 
 
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பிரியா பவானி சங்கரின் உண்மையான ட்விட்டர் கணக்கை விட  போலி கணக்கை தான் அதிகம் பேர் பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில் போலி கணக்கை 497 ஆயிரம் பேரும் பிரியா பவானி சங்கரின் கணக்கை 73 ஆயிரம் பேரும் பின் தொடர்கின்றனர்.
 
இதனை கண்ட ரசிகர்கள் இந்த போலி கணக்கு பிரச்சனையில் இருந்து தப்பிக்க உங்களுடைய ட்விட்டர் கணக்கை சரிபார்த்துக்கொள்ளுங்கள் (verified) என்று ட்விட் செய்து அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.