செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (17:22 IST)

சூர்யா படத்தில் சிறுத்தை சிவாவுக்கு சம்பளம் எவ்வளவு? தர்மசங்கடமான நிலைமை!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்க உள்ள திரைப்படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் சூர்யாவோடு ஒரு படத்தில் இணைய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

அதற்கான வேலைகளை இப்போது தொடங்கியுள்ள அவர் பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார். சூர்யாவை இயக்க சிறுத்தை சிவாவை 2012 ஆம் ஆண்டு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது அவருக்கு சம்பளமாக 3 கோடி ரூபாய் பேசப்பட்டதாம். ஆனால் இப்போது சிவாவின் சம்பளம் 18 கோடி என சொல்லப்படுகிறது. இதனால் பழைய ஒப்பந்தப் படி சம்பளம் கொடுக்கப்படுமா அல்லது புதிதாக ஒப்பந்தம் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.