1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 31 மே 2021 (15:41 IST)

தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரணிதா - திருமண புகைப்படங்கள் இதோ!

கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலம் ஆன நடிகை பிரணிதா சுபாஷ்.  இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடிகை பிரணிதாவுக்கு நிதின் ராஜு என்பவருடன் மிகவும் நெருக்கமான உறவினர்கள் நண்பர்களோடு எளிமையான முறையில்  பெங்களுருவில் திருமணம் நடந்துள்ளது.  
 
பிரணிதாவின் நீண்ட நாள் காதலரான நிதின் ராஜு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.  ப்ரணிதா - நிதின் ராஜுவின் திருமணத்திற்கு தென்னிந்திய திரை உலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.