செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (13:20 IST)

"எகிறிய கவின் ஓடி ஒளிந்த கஸ்தூரி" - இரண்டு கோஷ்டியாக பிரிந்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான  இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் இரு கோஷ்டியினராக பிரிந்து சண்டையிட்டு கொள்கின்றனர். 


 
தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் கஸ்தூரிக்கும் கவினுக்கும் சண்டை முற்றிவிட்டது.நீங்க அப்போ ஏதாச்சும் பேசுனீங்களா இப்போ வந்து பேசுறீங்கன்னு சொல்லக்கூடாது. என்று கூறுகிறார். இதனால் கவின் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருக்கும் லொஸ்லியா, கவின், முகன் சாண்டி என எல்லாரும் இழுத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். அப்போதும் விடாத கஸ்தூரி இப்படியெல்லாம் பேசுற நீங்க அந்த 4 பெண்களுடன் அப்படி பழகியிருக்க கூடாது என்று கூறிகிறார். இதை கேட்டவுடன் கடுப்பான கவின் உள்ளிருந்து " அந்த நாலு பெண்களுடன் விருப்பப்பட்டுத்தான் பேசினேன் இனிமேல் அதை சொல்லாதீங்க" என்று கத்துகிறார்.
 
உடனே முகன் கோபப்பட்டு கவினை உள்ளே அழைக்கிறார். இதிலென்ன ஒரு கஷ்டம் என்றால் தர்ஷனும் அந்த கூட்டத்தில் சேர்ந்துகொண்டு ஆடுகிறார். கொஞ்சம் நாட்கள் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தார். ஆனால் இப்படியே  போனால் மக்களால் வெறுக்கப்பட்டு தர்ஷன் வெளியேற்றப்பட்டு விடுவார் என்பது மட்டும் உறுதி.