பிக்பாஸில் உறுதி செய்யப்பட்ட இரண்டு நடிகைகள்: பரபரப்பு தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது அதிகாரபூர்வமற்ற முறையில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இரண்டு நடிகைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது
நடிகை ரம்யா பாண்டியன் நடிகை ஷிவானி நாராயணன் ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்று ஷிவானி நாராயணன் நீண்ட இடைவேளைக்குப் பின் தான் கோயிலுக்குச் சென்றதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னர் அவர் கோவிலுக்கு சென்றதாகவும் தெரிகிறது. ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகிய இருவரும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட புகழ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிகிறது
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது