வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:35 IST)

இந்த வயசுல இப்படி ஒரு போட்டோ ஷூட்டா...?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களில் முக்கியமானவர் நடிகை மீனா. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார் இவர் ரஜினிகாந்த் , விஜயகாந்த் , முரளி என அன்றைய காலகட்டத்தில் உச்ச நடிகர்களாக இருந்த பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து புகழின் உச்சத்தை அடைந்தார்.


 
அதையடுத்து 2009 ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு பிரேக் விட்டார். பின்னர் அவர்களுக்கு நைனிகா என்ற மகள் பிறந்தார். மீனா மகள் நைனிகா விஜய்யின் தெறி படத்தில் நடித்து பரவலாக பேசப்பட்டார். தற்போது மீனா பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், நடிகை மீனா சமீபத்தில் மாடர்ன் உடையணிந்து போட்டோஷூட்  நடத்தி அதனை தனது சமூகவலைத்தள பக்கங்ககளில் பதிவியுள்ளார். இந்த புகைப்படங்ககளை பார்த்த ரசிகர்கள் மீனாவா இது என்று ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.