திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:35 IST)

சமந்தாவா இது...! வெளியான வீடியோவால் ஷாக்கானா ரசிகர்கள் - நீங்களே பாருங்க!

2010ல் வெளியான "பானா காத்தாடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து "நீதானே என் பொன் வசந்தம்", "நான் ஈ", "கத்தி", "24", 'மெர்சல்", "சூப்பர் டீலக்ஸ்' போன்ற வெற்றி படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

 
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்த இவர்  கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்பும் நடிகை சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
இதற்கிடையில் தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுவது உள்ளிட்ட காரியத்தில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்.  அதனை நிரூபிக்கும் வகையில் அடிக்கடி ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்ககள் வெளியாகி வைராகி விடும்.


 
அந்தவகையில் தற்போது ஜிம்மில் அந்தரத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சமந்தா. அந்த வீடியோ வெளியான ஒரே நாளில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து லைக்ஸ்களை குவித்து வருவதோடு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும் வைரலாகி வருகிறது.