செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (19:35 IST)

கோலிவுட்டின் மிகச்சிறந்த பின்னணி இசைகளை அசிங்கப்படுத்தும் பிக்பாஸ் - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே மாடல் அழகிகளை ஏமாற்றிய மீரா மிதுன், சர்ச்சை நடிகை வனிதா விஜயகுமார் என சர்ச்சைகளில் தொடங்கி சரவணன் திடீர் வெளியேற்றம், மதுமிதாவின் காவிரி பிரச்சனை என அடுக்கிக்கொண்டே போகலாம். 


 
இதற்கிடையில் மக்களுக்கு பிடித்த ஒரு சில போட்டியாளர்களும் இருக்கின்றனர். அதில் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளிலேயே பரவலான இளம் ரசிகர்களை கொள்ளையடித்தது லொஸ்லியா தான்,  ஆனால்,  போக போகா கவினுடனான அவரது நட்பு கொஞ்சம் சலிப்பு தட்டி பின்னர் வெறுப்படைய செய்தது. 


 
கவின்,   அபிராமியில் ஆரம்பித்து தொடர்ந்து சாக்ஷி, லொஸ்லியா என ஒரு பெண்ணையும் விட்டுவைக்காமல் காதல் நாடகத்தை  அரங்கேற்றி வருகிறார். சாக்ஷி மற்றும் அபிராமியின் வெளியேற்றத்திற்கு பிறகு லொஸ்லியா கவினுடன் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்தார். இதனால் மக்கள் மிகுந்த வெறுப்புக்கு ஆளாகினர். அதுமட்டுமின்றி சமீப நாட்களாக லொஸ்லியா மற்றும் கவின் இருவரை மட்டும் தான் ப்ரோமோக்களில் காண்பிக்கின்றனர். வீட்டில் இருக்கும் மற்ற 7 போட்டியாளர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. அவ்வளவு ஏன் இன்று வெளிவந்த 3 ப்ரோமோக்களிலும் கவின் லொஸ்லியா காதல் தான் மாற்றி மாற்றி காண்பித்து மக்களை வேறுபற்றினர். 


 
மேலும்,  இந்த டிராமா காதலுக்கு  தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடல்களின் பின்னணி இசையை போட்டு ப்ரோமோவை வெயிடுவது இன்னும் மக்களை எரிச்சலடைய செய்தது . இதனை கண்டு கடுப்பான நெட்டிசன்ஸ் சகட்டு மேனிக்கு விஜய் டிவியை திட்டி தீர்த்து வருவதை நீங்களே பாருங்கள்.