வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (09:00 IST)

’ஐ லவ் புருஷக்குட்டி’: யாஷிகாவின் உருக்கமான இறுதி கடிதம்

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட துணை நடிகை யாஷிகா இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த உருக்கமான காதல் கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
சமீபகாலமாக சீரியல் நடிகைகள், நடிகர்கள், துணை நடிகைகள், நடிகர்களின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போவதும், காதல் தோல்விகளுமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
 
இந்நிலையில் சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை யாஷிகா(21) என்பவர் தனது காதலர் அரவிந்துடன் சென்னை வடபழனியில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். யாஷிகா திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். கடந்த 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்குள் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அரவிந்த் யாஷிகாவை விட்டு பிரிந்து சென்றார். இதனால் மன வருத்தத்தில் இருந்த யாஷிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் யாஷிகா இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் புருஷகுட்டி. ஐ லவ் யூ சோ மச். நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். ஆனால் உனக்குத்தான் என் மேல பாசம் இல்ல. உன்னை நம்பிதானே எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்தேன். உனக்கு என் மீது கவலை இல்லாம போச்சு. உனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம். உனக்கு என்மேல அக்கறை இல்ல. 
 
ஒரு வருஷமா புருஷன், பொண்டாட்டி மாதிரி சந்தோஷமா இருந்தோம். நான் சாப்பிட்டு மூணு நாளாச்சு. நீ இல்லாம சாப்பிடகூட தோணல. உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். நான் உன்னை உண்மையா லவ் பண்னேன். எனக்கு ஃப்ரூப் பண்ண வேறவழி தெரியல. நான் செத்துபோனாக்கூட நம்பிவியாண்ணு தெரியல. சாகிறத தவிர வேறுவழி தெரியல. நீ இல்லாம இருக்க முடியல. நான் போறேன். ஐ லவ்யூ சோ மச். லவ் யூ புருஷகுட்டி என உருக்கமாக எழுதியுள்ளார்.
 
இதனை கைப்பற்றி அரவிந்திடம் விசாரிக்கையில், யாஷிகாவ எனக்கு ரொம்ப பிடிக்கும், சின்ன சின்ன விஷயத்த சீரியசா எடுத்துக்குவா. வழக்கம்போல சண்டை தான். ஆனால் இப்படிபட்ட முடிவெடுப்பாள் என தெரியாமல் போனது. அவர் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கும் வேண்டாம் என அரவிந்த் கூறினார்.
 
இவரை அப்படியே விட்டால் யாஷிகாவின் முடிவையே இவரும் எடுத்துவிடுவார் என கருதிய போலீஸார் அவருக்கு  கவுன்சலிங் கொடுத்து வருகின்றனர்.