வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:11 IST)

கூண்டோடு கலைந்தது மலையாள நடிகர் சங்கம்.. மோகன்லால் உள்பட அனைவரும் ராஜினாமா..!

மலையாளத் திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்த நிலையில் மோகன்லால் உள்பட மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைந்து விட்டதாகவும் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. 
 
இந்த கமிஷன் சமீபத்தில் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு சில நடிகைகள் பிரபல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் மலையாள திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran