வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (17:25 IST)

மறைக்கறதுலயும் உருவாக்குறதுலயும் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளில்லை: கஸ்தூரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய முதல் புரமோவில், சனம் எழுதிய லெட்டரில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருந்ததை அடுத்து அந்த புரோமோ திடீரென நீக்கப்பட்டது எனபதும், அந்த புரோமோ விடியோ நீக்கப்பட்டதற்கு எந்த விளக்கமும் சேனல் தரப்பு கூறவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அலசி ஆராயப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகையும் பிக்பாஸ் மூன்றாவது சீஸனிலன் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி தனது டுவிட்டரில், ‘நடந்ததை மூடி மறைக்கறதுலயும்   நடக்காததை உருவாக்குறதுலயும்  விஜய் டிவியை அடிச்சுக்க ஆளில்லை’ என்று கூறியிருந்தார்.
 
கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர், ‘போன வாட்டி நீங்க உள்ளே தான இருந்திங்க நீங்களும் இத மாதிரி தான நடந்துகிட்டிங்க... அப்ப பேசுன காசு வரல.. அல்லது ஒங்க நடிப்பு சரில்ல.. அதற்கேத்த கூலி கெடைக்கல.. அது தான் இப்பவும் நடக்குது.. இப்பவாவது நடந்தது நடப்பது என்னா ன்னு ஊருக்கு துனிவுடன் சொல்லுங்க’ என்று கூறியதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘நான் நினைச்சபடி அவங்க இல்லை.  அவங்க நினைச்சபடி நான் இல்லை. அதனாலதானே  எனக்கு சீக்கிரம் விடுதலையும் ரொம்ம்ம்ம்ப லேட்டா ம்பளமும் கிடைச்சுது. இது ஊருக்கே தெரியுமே ! என்று பதிவு செய்துள்ளார்.