1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:35 IST)

முதல் நாளே அர்ச்சனாவை ஆஃப் செய்த சுசித்ரா: ஆதிக்கம் அடங்குமா?

முதல் நாளே அர்ச்சனாவை ஆஃப் செய்த சுசித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா அனைத்து போட்டியாளர்களையும் ஆதிக்கம் செய்தார். தனக்கு அடங்காதவர்களை பாசவலை வீசி அடக்கினார். இதனால் அவருடைய ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது
 
இந்த நிலையில் இன்று வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்துள்ள பாடகி சுசித்ரா முதல் நாளே அர்ச்சனாவை ஆப் செய்யும் வகையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீங்கள் அனைவரின் வாயையும் அடைக்கின்றீர்கள் என்றும் யாரையும் பேச விட மாட்டேன் என்கிறீர்கள் என்றும் சுசித்ரா கூறியது அர்ச்சனாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இனிவரும் நாட்களில் சுசித்ரா மற்றும் அர்ச்சனா இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இனிமேலும் அர்ச்சனாவின் ஆதிக்கம் செல்லாது என்றும் தாய்ப்பாசம் காட்டி இனி யாரையும் ஏமாற்ற முடியாது என்றும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.