திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (14:49 IST)

ஹைதராபாத் என்கவுண்ட்டர்… ஆதரவா ? எதிர்ப்பா ? – நடிகை கஸ்தூரி டுவீட் !

ஹைதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை வல்லுறவு செய்து கொலை செய்த . நான்கு பேரை சைராபாத் போலிஸார் நேற்று அதிகாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர் . குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் அவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தாமல் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றது சட்டத்துக்குப் புறம்பானது என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொது சமூகமோ இந்த என்கவுண்ட்டர் கொலைகளை ஆரவாரமாக கொண்டாடி வருகிற்து. இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுபற்றி டிவிட்டரில். ‘ஹைதராபாத்தில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் என்கவுன்டரில் போட்டு தள்ளிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை உன்னாவ், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’ என போலிஸின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது போல ஆதரவு தெரிவித்துள்ளார்.