திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (11:59 IST)

ஆட்சியமைக்க உரிமை கோரியது சிவசேனா - காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு!

பாஜக ஆட்சியமைத்தை எதிர்த்து வழக்கு தொடப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது சிவசேனா. 
 
மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக கவர்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 
 
இந்த வழக்கின்  தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது சிவசேனா. 
 
ஆம், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.