புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:41 IST)

அந்த ஆபீசர்களை பொள்ளாச்சிக்கு அனுப்புங்க: பிரபல நடிகை டுவீட்

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த 4 குற்றவாளிகள், அதன் பின்னர் அவரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக்கொலை செய்த ஈவு இரக்கமற்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் இந்த நால்வர் தான் என்பதை உறுதிசெய்தனர் 
 
இதனையடுத்து இன்று அதிகாலை நால்வரையும் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டிய போது திடீரென அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதனை அடுத்து நால்வரும் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் போலீசாரின் இந்த என்கவுண்டர் நடவடிக்கைகள் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளம் பயனாளிகள் ஆதரவு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என்கவுண்டர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டுவிட்டரில் ஹைதராபாத்  #DishaCase குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  என்கவுண்டர்  போட்டு தள்ளிய  போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உன்னாவ், பொள்ளாச்சிக்கு  இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் திரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது