செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2024 (16:48 IST)

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் வழக்கு பதிவு செய்திருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மதுரை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகள் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ச்அம்மனை வழங்க காவல்துறை அதிகாரிகள் சென்ற போது அவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.



Edited by Siva