செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (08:49 IST)

முக்கியத் தலைவர்களுடன் மோடி ஆலோசனை – நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?

இந்திய பிரதமர் மோடி நேற்று காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் கடந்துள்ளன. மக்கள் ஒழுங்காக ஊரடங்கைக் கடைபிடிக்க உதவுமாறு கலைத்துறையினர் மற்றும் விளையாட்டு பிரபலங்களை விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதீபா பட்டில், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் ம்ற்றும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது விலக்கிக் கொள்ளலாம? என்று அவர் ஆலோசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.