திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (15:56 IST)

எதிர் நீச்சல் சீரியல் புகழ் கனிகாவுக்கு நடந்த விபத்து… அவரே வெளியிட்ட புகைப்படம்!

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் அவரின் உதவியாளர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான பைவ்ஸ்டார் திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கனிகா. அதன் பின்னர் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் தனக்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார்.

அதையடுத்து மீண்டும் நடிப்புக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ள கனிகா எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார். ஆனால் சமூகவலைதளங்களில் அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் அது குணமாகும் எனவும் அறிவித்து, காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.