செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (14:54 IST)

மகளிர் தினத்தில் வாழ்த்துவதை விட இதை செய்யுங்கள்; பிரபல நடிகை ஆதங்கம்..!

kalyani
மகளிர் தினத்தில் வாழ்த்துவதற்கு பதிலாக மகளிர்களுக்கு எதிரானவற்றை மாற்றிக்கொள்ளுங்கள் என பிரபல நடிகை ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். 
 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன்பின் நாயகியாக பல தொலைக்காட்சி சீரியல்களை நடித்து வருபவர் கல்யாணி. ரோஹித் என்பவரை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆன இவர் சமீபத்தில் இந்தியா திரும்பி சமூக வலைதளத்தில் பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் மகளிர் தினத்தில் அவர் தனது சமூக வலைதளத்தில் ஒவ்வொரு நொடியும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டும் கௌரவ கொலைகள் செய்யப்படும் பலியாகி வருகின்றனர் 
 
அதிலிருந்து மீண்டு வருவதற்கு திடீரென இந்த ஒரு நாள் போதுமா? உலகம் நம்மிடம் மன்னிப்பு கேட்கவும் நாம் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்க்கும் என்பதற்காகவா இந்த ஒரு நாள்?
 
 பெண்கள் தினத்தில் வாழ்த்து செய்திகளை அனுப்புவதை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது அதற்கு பதிலாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva