திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (15:51 IST)

ஆஸ்கர் விருதுகளுக்கான தன்னுடைய வாக்கைப் பதிவு செய்த சூர்யா!

அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னால் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்தது, பின்னர் வெளியேறியது.  அதே போல சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் ஆஸ்கர் கமிட்டியின் யுடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு  2022 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்தது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்ற சூர்யா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான கமிட்டி உறுப்பினராக இணைந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இப்போது தனது வாக்கினை ஒரு உறுப்பினராக சூர்யா பதிவு செய்துள்ளார். இது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட்டை அவர் பகிர, அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.