1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (14:50 IST)

அதிக காதல் கடிதம் வர காளகஸ்தியில் தரிசனம் செய்த நடிகை!

அதிக அளவில் காதல் கடிதம் பெறுவதற்கு காளஹஸ்தியில் சென்று தரிசனம் செய்ததாக நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் வெளியான தலைவி மற்றும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் புத்தாண்டை அடுத்து அவர் ஒரு பதிவு செய்துள்ளார்.
 
அதில் இந்த 2022ஆம் ஆண்டில் தன் மீது குறைவான போலீஸ் புகார்களும் அதிக காதல் கடிதம் பெற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது அன்புக்குரிய எதிரிகளின் கருணையை பெறவே காளகஸ்தி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார். கங்கனா ரனாவத் செய்த இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.