1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 31 மே 2023 (15:47 IST)

ஆண்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது நான் மட்டும்தான்… கங்கனா ரனாவத் பதில்!

பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறர கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கோயிலுக்கு வரும் இளம்பெண்கள் அரைகுறை ஆடைகளோடு வருவது பற்றி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் ஆண் நடிகர்களுக்கு இணையாக பெண் நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டுமென சமீபத்தில் பிரியங்கா சோப்ரா பேசி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கங்கனா ரனாவத் “இது உண்மைதான். எனக்கு முன்னால் இருந்த நடிகைகள் அப்படிதான் சம்பளம் குறைவாக வாங்கினார்கள். அப்போது நான்தான முதலில் சமமான சம்பளம் தரவேண்டும் எனக் கூறினேன். அப்போது எனக்கு வந்த வாய்ப்புகளை சில நடிகைகள் இலவசமாக நடித்துக் கொடுத்தார்கள்.

இப்பொது திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நான்தான்” எனக் கூறியுள்ளார்.