திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (13:11 IST)

பெண் இல்லையெனில் இவ்வுலகமே இல்லை - பார்த்திபனின் வாழ்த்து!

இன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி எல்லோரும் தனத்தை சார்ந்த மற்றும் உலகம் உலகத்தில் உள்ள அத்தனை பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களின் சாதனைகளை பெருமையுடன் பேசி வருகிறார்கள். 
 
அந்தவகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், பெண்களின் உலகம் என்ற ஒன்று தனியே இல்லை!பெண் இல்லையெனில் இவ்வுலகமே இல்லை.அன்பும் ஆளுமையும்
 
ஒருங்கே பெற்று,குடும்பங்கள் துலங்க காரணமாகி,
சிறுகச் சிறுக தன்னலம் உதிர்த்து சார்ந்தோரை தாங்கிப் பிடித்து,யாதுமாகி நிற்கும் சக்தி பெண்!
 
உருவம் தவிர்த்து உள்ளம் தொட்டு ஆராதனை நாம் செய்தால்….
உயிர் வரை ஆணின் உயர் நிலை ஆரா(AURA) ஆவாள் அவள்! ர் > ள்’ளாகியது மரியாதை குறைவல்ல அன்பின் மிகுதி!
 
பெண்ணால் உயிர் பெற்றவர்கள் மட்டும் பெண்ணைப் போற்றி பாராட்டுவோம் ஓர் நாளில் மட்டுமல்ல வாழ்நாளில்!!!! என பதிவிட்டுள்ளார்.