1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (07:29 IST)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோதிகா!

தமிழ் திரை உலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
நடிகை ஜோதிகா கடந்த 1998 ஆம் ஆண்டு அஜித் நடித்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் அவர் விஜய் அஜித் சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே, என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன் பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் 
 
சமீபத்தில் கூட அவர் நடித்த உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் ஜோதிகாவுக்கு வெப்துனியா சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .