திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (12:58 IST)

ஜோதிகாவுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த "பொன் மகள் வந்தாள் " படக்குழு!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஜோதிகா 1997ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த "டோலி சஜா கி ரக்ஹ்னா" என்ற படத்தின் மூலம் கத நாயகியாக அறிமுகமானார். இதே படம் தான் தமிழில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் ரீமேக் செய்ப்பட்ட "ஜோடி". ஆனால், பாலிவுட் சினிமா ஜோதியின் திறமையை பயன்படுத்த தெரியாமல் தவற விட்டது. அதையடுத்து கோலிவுட்டிற்கு கிளம்பி வந்த ஜோதிகாவை தமிழ் சினிமா அரவணைத்து கொண்டது. பின்னர் வாலி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் ஜோ. 


 
அதையடுத்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் தொடர்ந்து நடித்து இன்று வரை தமிழில் முன்னணி நடிகைகள் பட்டியலில் உள்ளார். இந்நிலையில் தற்போது ’ஜாக்பாட்’ படத்தைத் தொடர்ந்து, ’பொன் மகள் வந்தாள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  புதுமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கம் இப்படத்தை  2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. 
 
இந்நிலையில் நேற்று தனது 41-வது பிறந்த நாளை ஜோதிகா கொண்டாடியா ஜோதிகாவுக்கு "பொன் மகள் வந்தாள்" அழகிய மியூசிக்கல் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்தனர்.