1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (09:12 IST)

இப்போதாவது ஹாலிவுட்டுக்கு செல்லுங்கள்… கமல்ஹாசனுக்கு ஏ ஆர் ரஹ்மான் கோரிக்கை!

தமிழ் சினிமாவின் இரு அடையாளங்களான ஏ ஆர் ரஹ்மானும் கமல்ஹாசனும் சமீபத்தில் அமெரிக்காவில் ஒன்றாக காட்பாதர் திரைப்படத்தைப் பார்த்தனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் இப்போது ஏ ஆர் ரஹ்மான் அளித்துள்ள ஒரு நேர்காணலில் அந்த சந்திப்பின் போது கமல்ஹாசனிடம் தான் வைத்த கோரிக்கை பற்றி பேசியுள்ளார். அதில் “20 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் ஒரு ஹாலிவுட் படத்தை எடுத்திருக்க வேண்டும்.” எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த நேர்காணலில் “நாங்கள் இருவரும் ஓப்பன்ஹெய்மர் படத்தைப் பார்த்தோம். இப்போதும் அவர் பல படங்களைப் பார்த்து அதில் பல காட்சிகளைப் பற்றி பேசுகிறார். அவரைப் போல எல்லா படங்களையும் பார்க்கும் பொறுமை எனக்கில்லை. இப்போதாவது அவர் ஹாலிவுட்டுக்கு சென்று ஒரு ஆங்கிலப் படம் எடுக்க வேண்டும்.  தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு சிறந்த படத்தை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.