திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 9 மே 2020 (19:24 IST)

அடுத்த ஒரு வருடத்திற்கு என் சம்பளம் ரூ.1 தான்... நடிகை ஆர்த்திக்கு குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.

ஆர்த்தியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருதி அடுத்த  ஒரு வருஷத்துக்கு தான் நடிக்கும் அத்தனை படங்களில் சம்பளமாக வெறும் ரூ.1 மட்டும் வாங்கிக்கொள்வதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பல பெரிய நடிகர்களே தங்களது சம்பளத்தில் இருந்து  25% லிருந்து - 40% பணத்தை குறைந்து கொள்வதாக அறிவித்திருந்த நிலையில் காமெடி நடிகை  ஆர்த்தியின் இந்த  முடிவு அனைவரையும் வியக்கவைத்துள்ளது. அவரது நல்ல மனதை ரசிகரகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.