1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (17:44 IST)

ரவுடி பேபி படத்தின் ஷுட்டிங் தொடங்கியது!

ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் ரவுடி பேபி படத்தின் ஷுட்டிங் இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது.

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடித்த மாரி 2 படம் அட்டர் ப்ளாப் ஆனாலும், அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலாலயே பல கோடிகளை சம்பாதித்திருக்கும். ஏனென்றால் யு டியூபில் சுமார் 100 கோடி பேரால் அந்த பாடல் பார்க்கப்பட்டது. பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை ரவுடி பேபி என்ற வார்த்தை இப்போது பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில் ரவுடி பேபி ஹன்சிகா நடிக்கும் ஒரு படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்கும் இந்த படத்தை ரமேஷ் பொ பிள்ளை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், லட்சுமி ராய் போன்றோர் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று தொடங்கியுள்ளது. இதில் பாடல் ஆசிரியர் வைரமுத்து கலந்துகொண்டுள்ளார்.