சைலண்ட்டா சம்பளத்தை ஏற்றிய சிவகார்த்திகேயன்… ஆனாலும் அசராத தயாரிப்பாளர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் பிஸ்னஸ் அமோகமாக நடந்து வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.
ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் ஆயுத பூஜை விடுமுறை வருவதாலும், போட்டிக்கு எந்த படங்களும் இல்லாததாலும் அனைத்து ஏரியாக்களிலும் படம் மிகப்பெரிய தொகைக்கு விலைபோயுள்ளதாம்.
இது தெரிந்தால் சும்மா இருப்பாரா சிவகார்த்திகேயன். உடனடியாக தனது சம்பளத்தை 7 கோடி உயர்த்தி ரவுண்ட்டாக 30 கோடி ஆக்கி விட்டாராம். ஆனாலும் அவரின் கால்ஷீட்டுக்காக முன்னணி தயாரிப்பு நிறுவனங்களே காத்துக் கிடக்கின்றனவாம்.