1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified வியாழன், 25 மே 2023 (07:23 IST)

நடிகரால் தொல்லையா?... சர்ச்சை செய்திக்கு ஹன்சிகா மறுப்பு!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  ஹன்சிகா மோத்வானி. இவர், விஜய்யுடன் இணைந்து வேலாயுதம், எங்கேயும் காதல், சிம்புவுடன் இணைந்து வாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது 50 வது படமான   மஹா என்ற படம் வெளியானது. இந்த நிலையில், தன் நீண்ட  நாள் காதலரான சோஹேல் கதுரியாவுடன் திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் இணையதளம் ஹன்சிகா பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “என் திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் ஒரு நடிகரால் நான் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்தேன். அப்போது நான் சினிமாவிற்கு வந்த புதிது. நான் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டுமென வந்த அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டேன். அவருடன் நான் டேட்டிங் செல்ல வேண்டுமென்று தொடர்ந்து வற்புறுத்தினார்.  அவரால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அந்த நடிகரின் பெயரை கூற விரும்பவில்லை'' என்று ஹன்சிகா கூறியதாக அந்த செய்தி வெளியாகி இருந்தது.

ஆனால் இப்போது ஹன்சிகா அப்படி தான் கூறவேயில்லை என மறுத்துள்ளார். மேலும் இதுபோல குப்பைகளை பதிப்பிப்பதை நிறுத்துங்கள் என்றும் ஆவேசமாகக் கூறியுள்ளார்.