திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (11:27 IST)

ரூ.25 கோடி சொத்தை பறிகொடுத்த நடிகை கவுதமி.. காவல் ஆணையரிடம் புகார் மனு..!

நடிகை கவுதமி தனது 25 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிபோனதாக சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் இதனால் அழகப்பன் என்ற நபருக்கு சொத்துக்களை வாங்கவும் விற்கவும்  உதவியாக இருந்ததாக கவுதமி தனது மனுவில் கூறியுள்ளார்.  
 
தமிழகத்தின் பல பகுதியில் உள்ள தன்னுடைய சொத்துக்களை விற்பதற்கு பவர் ஏஜெண்டாக அவரை மாற்றியதாகவும்  இது தொடர்பான நடவடிக்கைக்கு தன்னிடம் அவர் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னுடைய கையெழுத்தை பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கி சொத்துக்களை அபகரித்துள்ளதாகவும் இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
மோசடி செய்யப்பட்ட தன்னுடைய 25 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுதமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran